பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 66 கிராமங்களுக்கு நிவாரணம் வழங்கிய சத்தியம் தொலைக்காட்சி குழு

658

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, நம் சொந்தங்களுக்கு கை கொடுப்போம் என்ற பெயரில் சத்தியம் தொலைக்காட்சி மனித நேயத்திற்கான ஓர் இயக்கத்தை தொடங்கியது. அதைதொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு தரப்பினர் முன்வந்தனர்.

சத்தியம் தொலைக்காட்சி குழுவினர் இரவு, பகல் பாராமல் 3-ம் கட்டமாக நிவாரணப் பொருட்களை, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து வழங்கி வருகின்றனர். குறிப்பாக உதவிகள் கிடைக்காமல் தவித்து வரும் பகுதிகளை கண்டறிந்து இதுவரை 66 கிராமங்களில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் உடமைகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதுடன், சத்தியம் தொலைக்காட்சி குழுவினர் அவர்களுடன் துணையாய் நின்று துயரங்களை துடைத்து வருகின்றனர்.

 

Advertisement