ஹெல்மெட் அணியாமல் சென்ற போக்குவரத்து எஸ்.ஐ பணியிடை நீக்கம்

199

சென்னை போரூர் போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பாலு.

இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சபரி நகர் பகுதியில் பணியில் இருந்தபோது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியானது.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பாலு ஹெல்மெட் அணியாமல் சென்றது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பாலுவை பனி இடை நீக்கம் செய்து பெருநகர போக்குவரத்து மேற்கு மண்டல துனை கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of