மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அப்புறப்படுத்தும் பணி தொடக்கம்

127

அரியலூர் மாவட்டத்தில், விளம்பர பலகைகள் வைப்பதற்காக சாலையோர மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அப்புறப்படுத்தும் பணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாஸன் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்களது விளம்பரத்திற்காக சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் ஆணிகள் அடித்து விளம்பர பலகைகளை வைத்து வருகின்றனர்.

இதனால், மரங்கள் எளிதில் பட்டுப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில், அரியலூர் மாவட்ட காவல்துறை ஈடுபட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, ஜெயங்கொண்டம் சாலையோரங்களில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அப்புறப்படுத்தும் பணியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாஸன் தொடங்கி வைத்தார்.

இதன்மூலம், சாலையோரங்களில் இருக்கக்கூடிய மரங்களை பாதுகாக்க முடியும் என்றும், மீண்டும் மரங்களில் ஆணி அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, ஆலோசித்து வருவதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of