பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தில், மோடி மற்றும் சவுகான் படங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

897

பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளில் பதிக்கப்பட்ட, மோடி மற்றும் சவுகான் படங்களை அகற்ற மத்திய பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

அந்த வீடுகளில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரது படம் பதித்த டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளதால், வீடுகளில் பதிக்கப்பட்டுள்ள மோடி, சவுகான் உருவங்கள் கொண்ட டைல்ஸ்களை அகற்ற வேண்டும் என மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் மோடி, சவுகான் உருவங்கள் கொண்ட டைல்ஸ்களை அகற்ற உத்தரவிட்டது.

Advertisement