இதுக்கு அவர் சரிபட்டு வரமாட்டார்.., உமேஷை ஓரம் கட்டும் முன்னாள் வீரர்

494

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி இரணடு டி20 போட்டிகளும், ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடிவருகிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்து முடித்து டி20 போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங்கிலும், பந்து வீச்சுதளிலும் சிறப்பாக செயல் படவில்லை.அதுமட்டுமின்றி, உமேஷ் யாதவின் சொதப்பலான கடைசி ஓவரால் இந்திய அணி தோல்வியை எளிதில் தன்வசமாக்கியது.
இந்த படுதோல்வியை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் அணித் தேர்வு குழுவினரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இது குறித்து தனது கருத்தை தெரிவித்த கவாஸ்கர்,

“சர்வதே கிரிக்கெட் போட்டியில் எப்போதும் டி20 பொறுத்தவரை எந்த அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. கேப்டன் விராட் கோலி அணி தேர்வில் மிகப்பெரிய தவறை செய்துள்ளார். மூன்று விக்கெட் கீப்பர்களை பவுண்டரியில் கடைசி நேரத்தில் நிற்க வைப்பது எதிரணி எளிதில் ரன்களை குவிக்க சாதகமாக அமைந்துள்ளது.அதே போல், டெஸ்ட் போட்டியில் தன்னுடைய சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய உமேஷ் யாதவால் டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் அதைப்போன்று செயல் படமுடியவில்லை. அதனால் இவர் டி20, ஒரு நாள் போட்டிக்கு சரிபட்டு வரமாட்டார்.

இவருக்கு பதில் தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான விஜய் சங்கரை தேர்வு செய்து பரிசோதிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல் போட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று பெங்களூரில் நடைபெரும் இரண்டாவது டி20 போட்டி இந்தியா சிறப்பாக செயல் படும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of