குடியரசு தினம் – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கொடுத்த பரிசு

249

நாட்டின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு பரிசாக அரசியலமைப்பு சட்டத்தின் நகலை காங்கிரஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு பதிவில், அரசியலமைப்புச் சட்டம் விரைவில் தங்களை வந்தடையும் என்றும் நாட்டைப் பரிப்பதில் இருந்து தங்களுக்கு நேரம் கிடைத்தால் இதனைப் படித்துப்பாருங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அதனை சுட்டிக்காட்டும் விதமாக அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை பிரதமருக்கு அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of