விவசாய உரங்கள் மீதான GST வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின்

86

விவசாயிகளுக்கு நல்லது செய்ய மோடி அரசு விரும்பினால்  விவசாய உரங்கள் மீதான GST வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் பிரதமர் மோடி என்று விமர்சித்தார்.

விவசாயிகளுக்கு பட்ஜெட் என்று மத்திய அரசு ஏமாற்றி வருகிறது என்றும், விவசாயிகளை தற்போது வரை போராட மத்திய அரசு போராட வைத்துள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

விவாசியகளின் கடனை பிரதமர் மோடி ஒரு போதும் தள்ளுபடி செய்தது இல்லை என்றும், விவசாயிகளுக்கு நல்லது செய்ய மோடி அரசு விரும்பினால்  விவசாய உரங்கள் மீதான GST வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.