கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி மனு

285

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்துள்ளார். கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும், காயமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், புயல் பாதிப்பு மறுவாழ்வு மையம் ஏற்படுத்த வேண்டும், மீட்பு பணியை துரித படுத்த வேண்டும், கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து இந்த வழக்கு பிற்பகல் 1 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.