பிளஸ் 2 தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை

543

பொதுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கு போதிய அவகாசம் இல்லை என்றும் பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க முடியுமா என்பதும் சந்தேகம் என பல மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தங்களுக்குப் போதிய காலம் இல்லாததால், தேர்வுக்குத் தயாராவது பெரும் கடினமாக இருக்கும் என்று மாணவ, மாணவியர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

குறுகிய காலமே இருப்பதால், தங்கள் குழந்தைகளால், பொதுத் தேர்வுக்குத் தயாராக முடியுமா என பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் என முத்தரப்பு கோரிக்கையும் ஏற்று, தேர்வினை சற்று தள்ளி வைக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement