பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பள்ளி முதல்வரை மாற்ற வேண்டி திருவண்ணாமலையில் போராட்டம்

924

திருவண்ணாமலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பள்ளி முதல்வரை மாற்றாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வராக பணியாற்றிய குமார் தாக்கூர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் கனந்தம்பூண்டி கிராமத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வராக மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இவர் தொடர்பான செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக புகைப்படுத்துடன் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளி முதல்வரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். தவறினால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.

Advertisement