CAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்

246

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு எளிதில் குடியுரிமை வழங்க குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் பிற மாநிலங்களும், இந்த நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என்று, பாஜக ஆட்சி அல்லாத மாநில முதலமைச்சர்கலுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், கேரளாவை தொடர்ந்து, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப் சட்டப்பேரவையிலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of