மனித உணர்வுகளை மதிக்கவேண்டும் – நீதிபதிகள் உத்தரவு

342

ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாமல் வெளியேவந்தால், நீதிமன்றம் ஒன்றும் செய்யமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மனித உணர்வுகளை மதிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாக்கூறி, அப்பாவி பொதுமக்களை காவல்துறையினர் துன்புறுத்துதை தடுத்து நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்ட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோரடங்கிய அமர்வு வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் விசாரித்தது. இந்த விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்குகளை பதிவு செய்து, முறையான நடவடிக்கையை காவல்துறை எடுத்துவருகிறது என்றும் துன்புறுத்தல் சம்பவத்தை ஆதாரங்களுடன் நிரூபிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், நடுநிலையான அணுகுமுறையை காவல்துறையினர் கடைப்பிடிக்கவேண்டும் என்று தெரிவித்தனர். கடைக்கோடி சராசரி மனிதனும் காவல்துறையினரால்  பாதிக்கப்படக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மனித உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோரடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of