ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

617

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி மதுரையில்  உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் அலுவலக ஊழியர்கள் கோபி, வினோத், முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ போலீஸார், அட்டாக்பாண்டி, திருச்செல்வம், ஆரோக்கியபிரபு, சரவணமுத்து உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இச் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அப்போதையை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாராம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை  மாவட்ட கீழமை நீதிமன்றம் அட்டாக்பாண்டி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அட்டாக்பாண்டி உள்பட 9 பேரின் விடுதலையை ரத்து செய்து, ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of