ஆட்சி மாற்றத்திற்கு நேரம் வந்துவிட்டது – பாஜக எம்.பியின் கருத்தால் புதிய சர்ச்சை

323

முன்னாள் மத்திய மந்திரியும், பீகார் மாநிலம், பாட்னாசாகிப் தொகுதி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, பா.ஜனதாவில் அதிருப்தியாளராக உள்ளார். பிரதமர் நரேந்திரமோடியையும், பா.ஜனதா கட்சி தலைமையையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்தநிலையில் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாகி விட்டது. மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான சரியான, உகந்த நேரம் வந்துவிட்டது; புதிய, சிறந்த தலைமை வரவேண்டும் என்று நீங்கள் நினைக்க வில்லையா?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு அம்மா நிலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டும்,ஆதரவளித்தும் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of