சிறையில் ஏற்பட்ட கலவரம் ! 29 கைதிகள் பலி, 19 காவலர்கள் படுகாயம்

351

வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் அகாரிகுவா என்ற சிறைச்சாலை உள்ளது அச்சிறையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் ஒருவரை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கிக்கொண்டனர், இந்த கலவரத்தை தடுக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் தாக்கியதில் 19 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of