சிறிய தவறு.. பிரபல பாடகியை ‘கொலை’ செய்த நெட்டிசன்கள்..

3620

அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் டியாகோ அர்னான்டோ மரடோனா. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து விளையாட்டின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், கடந்த புதன்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனை அறிந்த பலரும், தங்களது ஆழ்ந்த இரங்கலை இணையத்தில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ஒரு சில நெட்டிசன்கள் மட்டும் உயிரிழந்தது மரடோனா என்பது தெரியாமல், பிரபல பாப் பாடகி மடோனாவிற்கு, தங்களது இரங்கல்களை தெரிவித்து வந்தனர்.

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், மடோனாவின் பெயர் டிரெண்ட் செய்யப்பட்டது. அதன்பிறகே, மரடோனா தான் என்று உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.

நெட்டிசன்களின் டுவீட்கள் சில பின்வருமாறு:-

 

Advertisement