நாளை விண்ணில் பாய்கிறது ரிசாட்-2 பிஆர்1 செயற்கைக்கோள்

323

ரிசாட்-2 பிஆர்1 (RISAT – 2BR1) செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி-சி 48 ராக்கெட் மூலம் நாளை  விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது.இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் நாளை  மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட்டவுன் இன்று விடியற்காலை  தொடங்கியது.

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of