இர்பான் தொடர்ந்து இன்று ரிஷி கபூர் : அடுத்தடுத்த மரணங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சி

1913

மும்பை : பாலிவுட்டில் ஒவ்வொரு திரைப்பிரபலங்கள் மறைந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஹிந்தி நடிகர் இர்பான் கான் மறைந்த நிலையில் இன்று (ஏப்.,30) ஹிந்தியில் மூத்த நடிகர்களில் ஒருவரான ரிஷி கபூர்(67) காலமானார். ரிஷி கபூர் மரணத்தை அமிதாப் பச்சன் டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரிஷி கபூருக்கு, கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதற்காக நியூயார்க்கில் ஒராண்டு காலம் சிகிச்சை பெற்றார். பின்னர் உடல் நலன் தேறி செப்டம்பர் 2019-ல் இந்தியா திரும்பினார். இந்நிலையில் புதனன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவரின் மறைவு பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement