உச்சத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை

705

உச்சத்திற்கு உயரும் பெட்ரோல்,டீசல் விலையால், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து 85 ரூபாய் 58 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எரிபொருள் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் எரிப்பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. தினசரி கட்டணம் மாற்றியமைக்கும் நடைமுறைக்கு முன்னர் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாய் 02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 57 ரூபாய் 41 ஆகவும் இருந்த நிலையில், இன்று தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் செல்கிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு 85 ரூபாய் 48 காசுகளாகவும், டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 78 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையை விட 10 காசுகள் உயர்ந்து 85 ரூபாய் 58 காசுகளாகவும், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையாக 78 ரூபாய் 10 காசுகளாகவும் விற்பனையாகி வருகிறது.

இந்த விலை உயர்வு பொது மக்கள், வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொடர் விலை ஏற்றதால், இன்னும் சில வாரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கிவிடுமோ? என வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.