அடி உதை வாங்கிய ரியாஸ்கான்..! மர்ம நபரை தேடும் போலீஸ்..!

2391

கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை மீறி சிலர் வெளியே சுற்றித்திரிகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரியாஸ்கான் தனது வீட்டருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, ஒரு பெண் உட்பட 5 பேர் கூட்டமாக சென்றுள்ளனர். இதனைப்பார்த்த நடிகர் ரியாஸ்கான், அவர்களிடம் ஊரடங்கு உத்தரவு குறித்து அறிவுறுத்தியுள்ளார்.

இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் திடீரென ரியாஸ்கானை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த நபரை தேடி வருகின்றனர்.

Advertisement