சாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி! பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்

885

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவர், உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது ஈஞ்சம்பாக்கத்தில் சாலையின் நடுவில் தொங்கி கொண்டிருந்த வயர் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜின்னா கழுத்தில் சிக்கியுள்ளது.

இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ஜின்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of