நடந்து சென்ற நந்தினி..! நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்..! பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!

523

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, நந்தினி அருகில் உள்ள பூங்கா ஒன்றிற்கு சென்றார்.

அப்போது அந்த வழியாக படுவேகமாக வந்த கார், நந்தினி மீது மோதி அவர் தூக்கி வீசப்பட்டார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நந்தினியை, அக்கம் பக்கதினர் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நந்தினி, சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த உறவினர்கள், விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்திலும் வெளியாகி வைரலாகி வருகிறது.