கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் சென்று பெண்ணை காளை தூக்கி எறிந்தது

364

கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணை காளை மாடு ஒன்று கொம்பால் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரபரப்பான சாலையில் காளை மாடு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்தபடி வந்துகொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தின் இரைச்சலால் மிரண்டு போன அந்த காளை மாடு, இருசக்கரவாகனத்தில் கடைசியாக அமர்ந்திருந்த பெண்ணை தனது கொம்பால் தூக்கி எரிந்தது.இதில் அந்த பெண் படுகாயம் அடைந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of