ஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma

185

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சட்ட மந்திரியாக இருப்பவர் பி.சி. சர்மா.

இவர் ஹபீப்கஞ்ச் ரெயில் நிலையம் அருகே உள்ள சாலை ஆய்வுப் பணிக்காக சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன் Laபா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்தபொழுது, வாஷிங்டன் நகரை விட மேம்பட்ட சாலைகள் இங்குள்ளன என அம்மாநில முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியிருந்தார்.

அதனை விமர்சிக்கும் விதமாக, வாஷிங்டன் நகரை விட மேம்பட்ட சாலைகள் ஒரு மழையில் என்னவாகி விட்டது என கடுமையாக விமர்சித்தார். பின்னர், 15 முதல் 20 நாட்களில் ஹேமமாலியின் கன்னம் போல் மத்திய பிரதேச சாலைகள் அழகாக்கப்படும் என கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.