6அடி ஆழ குழியில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள்

717

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை தோப்பு தெருவைச் சேர்ந்தவர் கண்ணதாசன்.

இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கண்ணதாசன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்து தினமும் தகராறில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து சென்ற கண்ணதாசன் நாகர்கோவிலில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு ஆனந்தி என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்து கொண்டார் கண்ணதாசன்.

இந்த நிலையில் கண்ணதாசன், ஆனந்தி மற்றும் அவர்களின் கூட்டாளி சதித் குமார் ஆகியோர் மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருடி விட்டு கூப்பாச்சிக் கோட்டை கிராமத்தில் உள்ள மூங்கில் காட்டில் 6அடி ஆழ பள்ளத்தில் மறைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பரவாக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தி, ஸ்பானர் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of