ராபர்ட் பயாஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது ஐகோர்ட்..!

286

ராபர்ட் பயாஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களில் ஒருவரான ராபர்ட் பயஸ் பரோல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாட்கள் பரோல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறைத்துறை பரோல் மனுவை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று இவர் மீதான வழக்கின் விசாரணை நடைபெற்றது.அதில் சென்னை உயர்நீதிமன்றம் , ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலேயும் நளினி சிறையில் இருந்து வெளியே வந்தபோது பின்பற்றிய விதிகளை பின்பற்றவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of