டோனியின் சாதனையை முறியடித்தார் ரோகித் | Rohit Sharma | Dhoni

358

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இது 1000-வது டி20 கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை இதற்கு முன் (98 போட்டிகளில் விளையாடி) எம்எஸ் டோனி பெற்றிருந்தார்.

ஆனால் நேற்று நடந்த இந்த போட்டி ரோகித் சர்மாவுக்கு 99-வது போட்டியாகும். இதன்மூலம் இந்தியாவுக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

மேலும், 8-வது ரன்னை எடுக்கும்போது டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் சாதனையில் விராட் கோலியை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். தற்போது ரோகித் சர்மா 2452 ரன்கள் அடித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of