புதிய சாதனையை படைப்பாரா ரோஹித் சர்மா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

624

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரண்டு டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கயுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சாதித்த இந்தியா சொந்த மண்ணில் அந்த அணியை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்துடன் இருக்கிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது.இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) ஆகியோரது சாதனையை முறியடிக்கும் நிலையில் உள்ளார்.

கெய்ல் 56 ஆட்டத்தில் 103 சிக்சர்களும் கப்தில் 76 ஆட்டத்தில் 103 சிக்சர்களும் அடித்து முதல் இடத்தில் உள்ளனர். ரோஹித் சர்மா 93 போட்டியில் 102 சிக்சர்கள் அடித்து உள்ளார்.

இன்றைய போட்டியில் அவர் 2 சிக்சர்கள் அடித்தால் கெய்ல், கப்தில் சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்துவார்.

சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர்) அதிக சிக்சர் அடித்துள்ள சாதனையை கிறிஸ் கெய்ல் சமீபத்தில் படைத்தார். அப்ரிடியை அவர் முந்தினார்.

டெஸ்டில் மெக்கல்லம் (நியூசிலாந்து) 107 சிக்சர் அடித்து முதல் இடத்திலும், ஒரு நாள் போட்டியில் அப்ரிடி (பாகிஸ்தான்) 351 சிக்சர்களுடன் முதல் இடத்திலும் உள்ளனர். 20 ஓவர் போட்டியில் ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடிக்க இன்று வாய்ப்பு இருக்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of