ரோஹித் சர்மா நிகழ்த்திய மிகமோசமான சாதனை..! அதுவும் 80 ஆண்டுகளுக்கு பிறகு..!

881

தற்போது செம பார்மில் இருக்கும் இந்திய வீரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், அதிரடியாக விளையாடி வருகிறார். இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி 2 இன்னிங்சிலும், சதம் அடித்து சாதனை படைத்தார். இருந்தாளும், இவர் மற்றுமொரு மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அது என்னவென்றால், இவர் விளையாடிய இரண்டு இன்னிங்சிலும், ஸ்டெம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆகியுள்ளார். அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில், இரண்டு இன்னிங்சிலும், ஸ்டெம்பிங் மூலம் அவுட்டாகிய முதல் வீரர் ரோஹித் சர்மா தானாம். க

டைசியாக 1939ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹம்மண்ட் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் ஸ்டெம்பிங் முறையில் அவுட்டாகி இருந்தார்.

சரியாக 80-ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதிரியான முறையில், ஒரு கிரிக்கெட் வீரர் அவுட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of