ஜாம்பவான்களின் சாதனை பட்டியலில் இடம் பிடித்தார் ரோகித் | Rohit Sharma

715

இந்தியா – வங்காளதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார்.

இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் மிக சிறந்த தலைமை வீரரான சுனில் கவாஸ்கர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும் இந்திய அணிக்கு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்த கபில்தேவ் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த ஜாம்பவான்களுடன் அந்த சிறப்பு பட்டியலில் இணைகிறார் ரோகித் சர்மா