‘எனது வேலை என்ன என்பது எனக்கு தெரியும்’.., ரோகித் சர்மா பளிச்

654

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்பவர் ரோகித் சர்மா. இவர் துணைக் கேப்டனாகவும் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதனால் விராட் கோலியை விட ரோகித் சர்மா, எம்எஸ் டோனி ஆகியோர் கேப்டன் பதவியில் சிறந்தவர்கள் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால், ரோகித் சர்மா இந்திய அணியில் தனது பணி எது என்பதை சரியாக புரிந்து வைத்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘துணைக் கேப்டனாக எனது பொறுப்பு விராட் கோலியின் கேப்டன் பதவிக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு சந்தேகம் அல்லது உதவி ஏதாவது வேண்டும் என்றால், நான் உதவி புரிவேன். இதைத்தான் நாங்கள் கடந்த சில வருடங்களாக கடைபிடித்து வருகிறோம்’’ என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of