எனக்கு புற்றுநோய், ஓய்வில் செல்கிறேன்.. ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி

1850

நியூயார்க் : பிரபல WWE ரெஸ்லிங் வீரரான ரோமன் ரெய்ன்ஸ் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கடந்த “ரா” நிகழ்ச்சியில் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். ரோமன் ரெய்ன்ஸ் தற்போது யுனிவர்சல் சாம்பியனாக இருக்கிறார்.

எனவே, தன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் விட்டுக் கொடுத்து விட்டு ஓய்வில் செல்வதாக அறிவித்துள்ளார். தன் ரெஸ்லிங் பயணம் இத்தோடு முடிந்து விடவில்லை தான் மீண்டும் வருவேன் என்றும் அவர் கூறினார்.

“தனக்கு லுகுமேனியா என்ற வகையான புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நோய் எனக்கு இருந்தது. அதிலிருந்து நான் மீண்டு வந்து போட்டிகளில் பங்கேற்றன். இப்போது இந்த புற்றுநோய் மீண்டும் என தாக்கியுள்ளது.” என கூறினார்.

இந்தத் தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்களுக்கு மேலும் சில தகவல்களை பகிர்ந்தார் ரோமன் ரெய்ன்ஸ் அதில் “லுகுமேனியாவுக்கு சிகிச்சை பெறவுள்ளதால், தன்னால் இப்போது போட்டிகளில் பங்கேற்க முடியாது.

அதனால் wweவில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். இதோ இந்த சாம்பியன் பெல்ட்டை இப்படியே விட்டுவிட்டு செல்கிறேன். இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.

இறைவனின் துணை இருந்தால் மீண்டும் இந்த ரிங்கில் சந்திக்கிறேன்” என கண்ணீர் மல்க தெரிவித்துவிட்டு ரிங்கில் இருந்து ரசிகர்களுக்கு கையசைத்தப்படி ரோமன் ரெய்ன்ஸ் wwe shield லிருந்து பிரியாவிடை பெற்றார்.

Advertisement