பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 2 ரவுடிகள்

143

புதுச்சேரியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிரிந்த ரவுடிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் பிள்ளையார் குப்பம் பகுதியில் 2 ரவுடிகள் பட்டாக்கத்தி உள்பட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தனர். இது தொடர்பான காட்சி இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே வீடியோ காட்சியில் இடம் பெற்று இருந்த இருவரும் சடலமாக கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன் ரவுடிகள் இருவருக்கும் பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 ரவுடிகளும் கற்களால் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of