காதல் ஜோடியை மிரட்டி கொள்ளையடித்த ரவுடி கும்பல்

350

மதுரை – நாகர்கோவில் நான்கு வழி சாலை அமைக்கும் போது ரெட்டியார்பட்டி அருகே மலையை குடைந்து சாலை அமைக்கபட்டதால் , அந்த பகுதி சுற்றுலத்தலமாக காணப்படுகிறது.

இந்த மலை பகுதிக்கு காதல் ஜோடிகள் அதிக அளவில் வருவதால், ரவுடி கும்பல் அதனை சாதகமாக பயன்படுத்தி, அவர்களை மிரட்டி பணம், நகை ஆகியவற்றை பறித்து செல்வதை தொடர்கதையாக கொண்டுள்ளனர்.

காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்துவிடும் என்பதால், காதல் ஜோடிகளும் இதுகுறித்து, எந்த புகாரும் அளிப்பதில்லை என கூறப்படுகிறது. மேலும் ரவுடி கும்பல் காதல் ஜோடிகளிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து காவல்துறையினர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ரவுடி கும்பல் காதல் ஜோடியை மிரட்டி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement