பட்டக்கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள்! அதிரடி காட்டிய போலீசார்!

742

ரவுடி தனது அடியாட்களுடன் பட்டப்பகலில் மலைப் பகுதியில், பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜீசஸ், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மலையடிவாரத்தில் தனது அடியாட்களுடன் பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்தது.

இதைதொடர்ந்து மல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த ஜீசஸ், குட்டியப்பன், வெங்கடேஷ், ரமேஷ், சிலம்பரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பின் 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.