பிரம்மிப்பூட்டும் ராயல் அட்லாண்டிஸ்-2 ஹோட்டல்

352

துபாயில் “ராயல் அட்லாண்டிஸ் 2” என்ற ஹோட்டல் மிகப்பிரம்மாண்டமான முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஹோட்டல் அடுத்த ஆண்டு திறக்க உள்ளனர்.

தனித்துவ வடிவமைப்புக்களுக்காக பல விருதுகள் பெற்றுள்ள இந்த கட்டிடம் ஒரு பாதி சொகுசு ஹோட்டலாகவும், மற்றொரு பாதி சொகுசு குடியிருப்புகளாகவும் கட்டப்பட்டுள்ளது.

ஹோட்டலாக இருக்கும் ஒரு பாதியில் 43 தளங்களில் 795 அறைகளும், உணவகங்கள் மற்றும் பார்களும் இடம்பெற்றுள்ளன. மற்றொரு பாதியில் 2 முதல் 5 படுக்கையறைகளுடன் கூடிய 231 குடியிருப்புகள் உள்ளன. அதில் பெரும்பாலானவற்றில் தனித்தனி மொட்டை மாடிகள், நீச்சல்குளங்கள், மாடித்தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குடியிருப்புகளின் விலை இந்திய மதிப்பில் 14 கோடி ரூபாய் முதல் தொடங்குகிறது.

Royal Atlantis 2