கெயிலின் ருத்ரதாண்டவம்.., பெங்களூருக்கு இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்

502

அனல் பறக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பல பரிட்சை மேற்கொள்கின்றனர்.இரு அணி கேப்டன்கள் முன்பு டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். பின்பு களமிறங்கிய பஞ்சாப் அணியின் அதிரடி தொடக்க வீரர்களான லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஆரம்பம் முதலே அதிரடியை காட்டி அணிக்கு தேவையான ரன்களை குவிக்கத்தொடங்கினர்.

பஞ்சாப் அணி ஒரு புறம் ரன்களை குவிக்க மறு புறம் பெங்களூர் அணி விக்கெட்டுகளை எடுக்கத்தொடங்கினர். இதில் ராகுல் 18 ரன்களுடன் வெளியேறினார். பின்பு வந்த அகர்வால் உடன் ஜோடி சேர்ந்து கெயில் விளையாடத்தொடங்கினர். இருப்பினும் அகர்வால் 15 ரன்களில் வெளியேறினார்.பின்பு வந்த வீரர்களும் கெயிலுடன் ஜோடி சேர்ந்து நீண்ட நேரம் நிற்க முடியாமல் சொர்ப்ப ரன்களில் வெளியேறினர். பஞ்சாப் அணி விக்கெட் இழந்தாலும் அந்த அணியின் நட்சத்திர வீரரான கெயில் களத்தில் நின்று பெங்களூர் அணியின் பந்துகளை பறக்க விட்டர்.

இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவிற்கு 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை சேர்ந்தனர். இதில் கிறிஸ் கெயில் சதத்திற்கு 1 ரன்கள் குறைவாக களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.பின்பு 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய பெங்களூர் அணியின் அதிரடி தொடக்க வீரர்களான படேல், விராட் கோலி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி விளையாடி வருகின்றனர். தொடர் தோல்வியை தவீர்க்க போராடி வருகின்றனர்.

இருப்பினும் படேல் 19 ரன்களுடன் வெளியேறினார். இதுவரை பெங்களூர் அணி 5 ஓவர் முடிவிற்கு ஒரு விக்கெட்டை இழந்து 54 ரன்களூடன் களத்தில் விளையாடி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of