ரூ.1.5 கோடி அபராதம் வசூல்: டிக்கெட் பரிசோதகர் சாதனை

274

மத்திய ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர் எஸ்.பி கலாண்டே என்பவர் 2019ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 22 ஆயிரத்து 680 பயணிகளிடம் இருந்து 1.51 கோடி ரூபாய் அபராதமாக வசூலித்திருக்கிறார்.அவருடன் மேலும் மூன்று பரிசோதகர்களும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலித்துள்ளனர்.எம்.எம்.ஷிண்டே, 1.07 கோடி ரூபாயும், டி.குமார், 1.02 கோடி ரூபாயும், ரவிகுமார், 1.45 கோடி ரூபாயும் அபராதமாக வசூலித்துள்ளனர்.

அவர்களின் பங்களிப்பை பாராட்டி, ஊக்கத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 2019ல், டிக்கெட்இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் 192.51 கோடி ரூபாயை, மத்திய ரயில்வே, அபராதமாக வசூலித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of