ஊரடங்கு விதிமீறல் அபராதம்…! ரூ.10 கோடியை கடந்தது…!

147

சென்னை: ஊரடங்கை மீறியவர்களிடம் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் அத்தியாவசியம் இன்றி தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 5,82,877 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 4,48,456 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விதிகளை மீறியதாக இதுவரை 5,44,566 வழக்குகள் பதிவாகி ரூ.10.21 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of