கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக 15,000 கோடி ரூபாய் கோரிக்கை

422

பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நேற்று மாலை டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு இல்லத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து இன்று காலை பிரதமர் இல்லத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, காலை 9.45 மணியளவில் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அதில் 1500 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் புயல் சேதங்களை மதிப்பிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை விரைந்து தமிழகம் அனுப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.