போலி பத்திரம் தயாரித்து வங்கியில் இரண்டரை கோடி ரூபாய் கடன் மோசடி

529

பத்திரபதிவு துறை சார்பதிவாளர் துணையோடு போலி பத்திரம் தயாரித்து வங்கியில் இரண்டரை கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆதாரங்களுடன் புகார் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த தங்கவேலு என்பவருக்கு, மாங்குளம் கிராமத்தில் 5 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. இந்த இடத்திற்கு மதுரையை சேர்ந்த ரத்தினம், ராமகிருஷ்ணன், சதீஸ்குமார் ஆகியோர் காரியாபட்டி சார்பதிவாளர் முருகனின் துணையோடு போலி பத்திரம் தயாரித்துள்ளனர்.

அந்த போலி பத்திரத்தை அருப்புக்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அடமானம் வைத்து 2 கோடியே 55 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து மோசடியில் ஈடுபட்ட நபர்களிடம் தங்கவேலு கேட்ட போது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கவேலு இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆதாரங்களுடன், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.