தமிழகத்திற்கு மட்டும் ரூ.355 கோடி ஒதுக்கீடு

249

15வது நிதிக்குழு பரிந்துரையின்படி, 14 மாநிலங்களுக்கு 6 ஆயிரத்து 196 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 355 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 2015-20 காலகட்டத்தில் மாநிலங்களுக்கு 42 சதவீத வரிப் பகிர்வு இருந்த நிலையில், இந்த ஆண்டிற்கான வரிப் பகிர்வு 41 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மொத்த வரியில் ஒரு சதவீதம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசங்களான ஜம்மு – காஷ்மீர், லடாக் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி, 14 மாநிலங்களுக்கு 6 ஆயிரத்து 195 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவுக்கு ஆயிரத்து 276 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு 952 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 355 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான மானியமாக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement