தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்

805

நெல்லை அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் குட்கா ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், கேரளாவுக்கு கடத்துவதற்காக நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பணகுடி நான்குவழி சாலை பகுதியில் உள்ள பிளைவுட் குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையத்து குடோனில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பணகுடி போலீசார் குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement