வியாபாரியிடம் ரூபாய் 6 லட்சம் பறிமுதல்

319

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையின் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை நடத்தியபோது, அவரிடம் இருந்த ஒரு கைப்பையில் ரூ. 5 லட்சத்து 98 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரை விசாரித்தபோது அவர் மேட்டுப்பாளையம் -அன்னூர் சாலையில் உள்ள புதிய மார்க்கெட்டில் காய்கறி மண்டி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

இந்த பணத்தை ஊட்டி, கர்நாடக மாநிலத்தில் இருந்து மண்டிக்கு காய்கறி சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் நிலையான கண்காணிப்பு குழுவினர் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணம் வேண்டும். இது தொடர்பாக நீங்கள் தாசில்தார் அலுவலகத்தில் கூறுங்கள் என பணத்தை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of