8 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்!

321

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 8 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மெரைன் போலிஸார், ஒருவரை கைது செய்து விசாரனை மேற்கொண்டனர்.மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மெரைன் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதனையடுத்து புதுமடம் அருகேயுள்ள தேப்புவலசை பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதணையில் ஈடுபட்டனர்.

அப்போது கோபு என்பவரிடம் இருந்து 8 லட்சம் மதிப்பிலான 152 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மெரைன் போலீஸார், அவரையும் கைது செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of