மதுரையில் RSS நடத்தும் மாநாட்டிற்கு எதிர்ப்பு..! – டுவிட்டரில் டிரெண்டாகும் “ #SaveVAIGAIfromRSS”

786

மதுரையில் வைகை கரையில் சந்நியாசிகள் மாநாட்டை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ட்விட்டரில் #SaveVAIGAIfromRSS என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி முதலிடம் பிடித்துள்ளது.

மதுரை நகரில் வரும் 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 4-ந் தேதிவரை சந்நியாசிகள் மாநாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்துத்துவா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு ‘வைகைப் பெருவிழா’ என்ற பெயரில் மதுரை புட்டுத்தோப்பு வைகை கரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நிர்வாண சாதுக்களை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் #SaveVAIGAIfromRSS என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.

கங்கை மாசடைந்தது போல இதில், வைகை கங்கை நதிக்கரை போல அழுக்கடைய விடமாட்டோம் என்ற குரலை கவிதா என்கிற ட்விட்டர் வாசி பதிவிட்டுள்ளார். கங்கை நதியின் மாசடைந்த படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அசோக்குமார் தவமணி என்ற ட்வீட்டிஸ், மதுரை மதச்சார்பற்ற நகரம்; மதுரை சித்திரை திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று அமைதியாக கொண்டாடுகின்றனர் எனக் குறிப்பிட்டு இஸ்லாமிய குடும்பத்தினர் சித்திரை திருவிழாவில் பங்கேற்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு வராத கூட்டம் கோவை ஜீவா என்பவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஓடும் ரயிலை வைகை ஆற்று பாலத்தில் 4நாட்கள் மறித்து நிறுத்தியபோது வராத கும்பல் வைகை பெருவிழா என வருவது யாரை ஏமாற்ற..? என கொந்தளித்துள்ளார். அத்துடன் ஜல்லிக்கட்டு ரயில் மறியல் போராட்டம் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பிரனேஷ் என்ற ட்வீட்டிஸ், நியூட்ரினோ ஆய்வு திட்டத்தின் பெயரால் வைகை நதியை நாசமாக்குகின்றனர்; அவர்களே இப்போது வைகையை பாதுகாப்போம் என்பதா? என கோபத்தைக் காட்டியுள்ளார்.