சாலை மறியலில் வெடிகுண்டு வீசியதாக ஆர்.எஸ்.எஸ் ஊழியர் கைது..!

1376

கடந்த வாரம் கேரளாவில் உள்ள கதிரூர் காவல் நிலைய எல்லையில் உள்ள பொன்னியம் நயனார் சாலையில் மறியலில் ஈடுபட்டபொழுது வெடிகுண்டு வீசியதாக RSS ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோயம்பத்தூரில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் இருந்து வசிக்கும் கே.பிரபேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி திரு. நிஜீஷ் கூறுகையில், பிரபேஷ் பல வன்முறை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் என கூறினார்.

மேலும் ஜனவரி 16 ஆம் தேதி அதிகாலையில் அவர் வெடிகுண்டு வீசினார் என தெரிவித்த அவர்,  எஃகு குண்டு வீசப்பட்டதால் பணியில் இருந்த இரண்டு போலீசார் நூலிழையில் உயிர் தப்பியதாக என தெரிவித்தார்.

Advertisement