புகார் கொடுத்த 1 ஆம் வகுப்பு மாணவி.., ஆடிப்போன ஆர்.டி.ஓ.

979

பொன்னேரி சிவன்கோவில் தெருவில், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளியின் கட்டிடம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கல்வித்துறைக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த நிலையில் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான பொன்னேரி தாயூமான் செட்டி தெருவை சேர்ந்த அதிகை முத்தரசி (வயது 6) இன்று காலை திடீரென பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தாள். அவள் தனது பள்ளி மிகவும் சேதமடைந்து இருப்பதாக புகார் மனுவை ஆர்.டி.ஓ. நந்தகுமாரிடம் கொடுத்தாள்.

இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.டி.ஓ.நந்தகுமார் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக மாணவியிடம் கூறி அனுப்பி வைத்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of