“PF” பணம் எடுக்க கட்டுப்பாடு! செக் வைத்த மத்திய அரசு!

3362

அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் மாதம் குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதி என்ற பெயரில் பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணத்தை, தங்களுக்கு தேவைகள் இருக்கும் போது ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“வருங்கால வைப்பு நிதி சட்டம் 1960-ன்படி அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்டவோ, வாங்கவோ தனது வருங்கால வைப்பு நிதித்தொகையில் இருந்து 90 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 2-வது வீட்டுக்காக வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of