ஆளும் கட்சியினரே பல இடங்களில் வெளிப்படையாக பணப்பட்டுவாடா செய்கின்றனர் – ஆர்.எஸ்.பாரதி

783

ஆளும் கட்சியினரே பல இடங்களில் வெளிப்படையாக பணப்பட்டுவாடா செய்து வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூரில் தேர்தல் ரத்து செய்யும் சூழல் இல்லை என்றும் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும் எனவும் தெரிவித்தார். அமைச்சர்கள் வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளது குறித்து ஆதாரங்கள் கிடைத்து வருவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 12 புகார்கள் கொடுத்துள்ளோம் என்றும் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of